செந்தில் பாலாஜியின் செயல்களை அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்களை அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



Coimbatore: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பாரதி பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "அமைச்சர்களுக்கு வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம், ஆனால் பொதுமக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் புரிந்து கொள்வதில்லை," என்று கூறினார்.

மேலும், தமிழக முதலமைச்சரின் மறதி குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், "இவ்வளவு சீக்கிரமாக முதலமைச்சருக்கு மறதி ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. இன்று தியாக சுடராக அவரை பார்க்கும் முதலமைச்சர், அன்றைக்கு அவரது ஊருக்கே சென்று அவருடைய வாயால் பேசிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பேசியதை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இந்த மறதி தமிழகத்திற்கு நல்லதில்லை என்பது எங்களது கருத்து," என்றார்.

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், "நிபந்தனைகளை அவர் சரியாக பின்பற்றுகிறாரா என்பதை அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு அவருக்கு ஆதரவான நிலையில் இருக்கக்கூடிய சூழலில், அவரும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள சூழலில் அவரின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்," என்று தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...