இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை, போதைப்பொருள் பிரச்சனை, கோயில் தரிசன கட்டணம் குறித்து விமர்சனம் செய்தார்.



கோவை: கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

கோவை மாநகர் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



இராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் ரகசிய அமைப்பு துவங்கப்பட்டிருப்பதை உளவுத்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோவையில் மீண்டும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும், "பங்களாதேஷ் பயங்கரவாதிகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஊடுருவி வருகின்றனர். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டால் தமிழகத்தில் அதிகளவில் கொலைகள் நடக்கின்றன," என்று குற்றம்சாட்டினார்.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உபயோகித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் தேங்காய் உடைத்து முறையிட போவதாகவும் தெரிவித்தார்.

"கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டி பல போராட்டங்கள் நடத்தியும், இந்த அரசாங்கம் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் செயல்படுகிறது," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறி முடித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...