கோவை திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள திமுக அரசு - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

சூலூரில் நடைபெற்ற அண்ணாவின் 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை மாவட்டத்திற்கான அனைத்து திட்டங்களையும் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.


Coimbatore: அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் சூலூர், கிட்டாம் பாளையத்தில் நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பேசிய அவர், திமுகவின் ஆரம்ப காலகட்டத்தில் வெற்றிக்கு எம்.ஜி.ஆர் தான் காரணம் என பேரறிஞர் அண்ணா தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். எம்.ஜி.ஆர் மட்டும் கூடுதலாக 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு கிடைத்திருக்கும் என்றும், இலங்கையில் இன்றும் பிரபாகரன் வீட்டுக்கு அருகே எம்.ஜி.ஆருக்கு சிலை அமைத்து தமிழ் மக்கள் மரியாதை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



மேலும் அவர் பேசுகையில், "கடந்த அதிமுக ஆட்சியின் நடவடிக்கைகளால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு கோவை மாநகருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாத நிலையை உருவாக்கி இருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாராக இருக்கிறேன்" என சவால் விடுத்தார்.

ஆனைமலை நல்லாறு திட்டம் உள்பட அனைத்து கோவையின் திட்டங்களையும் திமுக அரசு கிடப்பில் போட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை ஜோராக நடைபெறுவதாகவும் வேலுமணி குற்றம் சாட்டினார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...