தூய்மையான நகரங்களுக்கான "ஸ்வச் ஸர்வக்ஷன் 2017" தரவரிசை பட்டியலில் கோவை மாநகராட்சி 16-வது இடம்

தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 500 நகரங்களுக்கிடையே "ஸ்வச் ஸர்வக்ஷன் 2017" என்னும் தூய்மையான நகரங்களுக்கான தரவரிசை பட்டியலில் கோவை மாநகராட்சி 16-வது இடம் பிடித்துள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 500 நகரங்களுக்கிடையே ஸ்வச் ஸர்வக்ஷன் 2017 என்னும் தூய்மையான நகரங்களுக்கான மதிப்பாய்வு கடந்த ஜனவரி 2017-ல் நடத்தப்பட்டு தரவரிசை பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு மூலம் ஆண்டு தோறும் மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பாக தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஸ்வச் ஸர்வக்ஷன்- 2016ல் நமது நகரம் சென்ற ஆண்டு பங்கேற்று தரவரிசையில் 18-வது இடம் பெற்றது. 

இந்த ஆண்டு ஸ்வச் ஸர்வக்ஷன் 2017-ல் கோவை மாநகராட்சி தரவரிசை பட்டியலில் 16-வது இடம் பிடித்துள்ளது. மேலும் ஸ்வச் ஸர்வக்ஷன் 2017-ல் தூய்மைப்பணியில் கோவை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பொது மக்களுக்கும், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் மாநகராட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், கோவை மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக உயர்த்திடவும், இனிவரும் காலங்களில் ஸ்வச் ஸர்வக்ஷன்-யில் கோவை மாநகராட்சியை முதலிடம் பிடிப்பதற்கும் தூய்மைப் பணியில் தொடர்ந்து அனைவரும் செயல்படுவோம்.

ஆகவே, பொது மக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து, வீடு வீடாக குப்பை சேகரம் செய்ய வரும் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். மேலும் குப்பைகளை தெருக்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் கொட்டுவதை தவிர்த்து குப்பைத்தொட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் நமது நகரில் தூய்மை காக்க பொது மக்கள் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பதை தவிர்த்து தனிநபர் கழிப்பிடம் அல்லது பொது கழிப்பிடங்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...