கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 2 செண்ட் நிலம் அன்பளிப்பு: எஸ்.பி.வேலுமணி உதவி

கோவை தொண்டாமுத்தூரில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் 90 வயது கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்தார். பாட்டியின் சேவையை பாராட்டும் விதமாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.



Coimbatore: கோவையில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது சொந்த செலவில் 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90 வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார். இவரது நேர்மையையும், சமூக சேவையையும் பாராட்டும் விதமாக, எஸ்.பி.வேலுமணி இந்த உதவியை செய்துள்ளார்.



பாட்டி கமலாத்தாளின் வீட்டின் அருகிலேயே இரண்டு செண்ட் நிலம் வாங்கப்பட்டு, அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் பத்திரத்தை நேரில் சென்று பாட்டி கமலாத்தாவிடம் ஒப்படைத்தார் எஸ்.பி.வேலுமணி.

இந்த அன்பளிப்பு மூலம், பாட்டி கமலாத்தாளின் சேவை மேலும் தொடர ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சமூக சேவையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...