எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசியதற்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, எச்.ராஜாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மாவட்ட தலைவர் N.K.பகவதி பேசுகையில், "பாரம்பரியமிக்க நாட்டுக்காக தங்களுடைய சொத்துக்களை வழங்கி, இந்த நாட்டுக்காக பாட்டி, தந்தையை இழந்து நாட்டிற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் தலைவரை பார்த்து தேசவிரோதி என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்" என்று கூறினார்.

மேலும் அவர், "இதற்கு மேல் ராகுல் காந்தியை எச்.ராஜா விமர்சித்தால், அவர் செல்லும் இடமெல்லாம் செருப்படி கொடுப்போம்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...