மேட்டுப்பாளையத்தில் 1500 மதரசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம்; இந்து சமுதாய நலச்சங்கம் வரவேற்பு

மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு 1500 மதரசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. இந்து சமுதாய நலச்சங்கம் குளிர்பானம் வழங்கி வரவேற்றது.



கோவை: மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாளை ஒட்டி 1500 மதரசா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது.

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பெரிய பள்ளி வாசல் பகுதியில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜயூப் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதனையடுத்து உதகை சாலை, பேருந்து நிலையம், அண்ணாஜீராவ் சாலை என மேட்டுப்பாளையத்தின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்த மிலாது நபி ஊர்வலம் வலம் வந்து மீண்டும் பெரிய பள்ளிவாசலில் நிறைவடைந்தது.

60 மதரசா பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு "நபிகள் நாயகம் வழி நடப்போம்", "இந்தியா எங்கள் தாய்நாடு", "இஸ்லாம் எங்கள் வழிபாடு" என்ற கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.



இந்த மிலாது நபி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலம் வந்த இஸ்லாமிய பள்ளி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளுக்கு மேட்டுப்பாளையம் இந்து சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம் உள்ளிட்டவைகளை வழங்கி வரவேற்றனர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...