தெரு விளக்குகள், குடிநீர் குறைபாடு குறித்து குறைதீர் கூட்டத்தில் மாநகராட்சி அணையரிடம் பொதுமக்கள் மனு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரால் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து மண்டலங்களிலும் உள்ள அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை குறைதீர்ககும் பெட்டியில் போடப்பட்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



மேலும், ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திலும் தினமும் மாலை 4.30 மணியளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரிடம் பொதுமக்கள் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று (செவ்வாய்) கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், சாலைகள் சீரமைக்கும் பணிகள் என பல்வேறு உதவிகள் கோரி 30 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...