ஓணம் பண்டிகைக்காக கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில் சேவை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 16 வரை இயக்கப்படும்.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை-மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06161) செப்டம்பர் 13 அன்று மாலை 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும். திரும்பும் வழியில், மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் (எண்: 06162) செப்டம்பர் 15 அன்று மாலை 6:45 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் காசர்கோடு, நிலேஸ்வர், பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை-கண்ணூர் சிறப்பு ரயில் (எண்: 06163) செப்டம்பர் 14 அன்று இரவு 11:50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 1:30 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையத்தை வந்தடையும். திரும்பும் வழியில், கண்ணூர்-சென்னை சிறப்பு ரயில் (எண்: 06164) செப்டம்பர் 16 அன்று மாலை 3:45 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...