"வேண்டும், வேண்டும் மதுக்கடை வேண்டும்" - காரணம்பேட்டையில் ஒரு 'குடி'மகனின் கதறல்

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவ்வாறான சாலைகளில் இருந்த மதுபானக் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, அகற்றப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் நிறுவ மதுபானக் கடை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பெண்கள் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கப்படும் பட்சத்தில் மது அருந்த வருவோரால் பெண்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, அவ்வாறான முடிவை மதுபானக் கடை நிர்வாகத்தினர் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சாலையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு உட்பட்ட கோடங்கிபாளையம், காரணம்பேட்டை பகுதியில் "வேண்டும் வேண்டும் ஒயின் சாப் (மதுக்கடை) வேண்டும்" என்ற வார்த்தைகள் அடங்கிய பதாகையினை கழுத்தில் மாட்டிக் கொண்டு சுப்ரமணியம் என்பவர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அவர் அணிந்திருந்த அந்த பதாகையில் அகற்றப்பட்ட மதுக்கடை எண்- 1928 அல்லது 2263 கடை வேண்டும் என எழுதப்பட்டிருந்து. 

இதனிடையே, சுப்ரமணியம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு வந்த அவரது மனைவி தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து, இனிமேல் மது வாங்கிக் குடிக்க பணம் தருவதாக அவரது மனைவி ஒப்புக்கொண்டதையடுத்து சுப்ரமணியம் தனது தர்ணாவை கைவிட்டார்.

தமிகத்தில் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என தன்னெழுச்சியாக பெண்கள் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இச்சூழ்நிலையில் மதுக்கடை வேண்டும் என இவ்வாறான 'குடி'மகன்கள் போராட்டங்களில் ஈடுபடுவது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ப்திக்குள்ளாக்கிள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...