கோவை தனியார் விடுதியில் பகலில் புகுந்து செல்போன் திருடிய நபர் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பகல் நேரத்தில் புகுந்து செல்போன் திருடிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட்மென்ஸ் எனும் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (22) என்பவரின் செல்போன் திருட்டு போனது தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று பிரவீன் குமார் பகலில் விடுதி அறையில் உறங்கியுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது தனது செல்போன் காணாமல் போனதைக் கண்டறிந்தார். விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் மெதுவாக நடந்து வந்து அறைக்குள் சென்று செல்போனை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரவீன் குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

கோவை மாநகரத்தில் ஏற்கனவே இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தற்போது பகல் நேரத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருடும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...