உடுமலை நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் முறை பின்பற்றப்படவில்லை: நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

உடுமலை நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் முறை பின்பற்றப்படவில்லை என்று நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நகராட்சி கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் 23-வது சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை என்றும், தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். எஸ்.வி.புரம் செல்லும் பகுதியில் உள்ள தனியார் மதுபானக் கூடத்தை அகற்ற வேண்டும் என்றும், 27-வது வார்டில் உள்ள நெடுஞ்செழியன் காலனியில் விஷச் சந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.



முன்னாள் நகராட்சி தலைவரும், தற்போதைய 33-வது வார்டு உறுப்பினருமான வேலுச்சாமி பேசுகையில், நகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளுக்கு நகர மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிப்பு விடப்படுவதில்லை என்றும், ஒரே நபருக்கு டெண்டர் விடப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், நகராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகளின் வாடகை அதிகமாக உள்ளதால் அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. நகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....