வாட்ஸ்அப் குழு மூலம் வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு: 117 ஏஜென்ட்கள் கண்டுபிடிப்பு

கோவையில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய வழக்கில் வாட்ஸ்அப் குழு மூலம் செயல்பட்ட 117 ஏஜென்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, 15 வெளிநாட்டு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, கோவை தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து வடக்கு காவல் துணை ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், "கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி 117 ஏஜென்ட்கள் மூலம் விபச்சார தொழில் செய்வது தெரியவந்தது. கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில், நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன," என்றார்.

மேலும் அவர், "ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ்அப் குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம் கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கபீர் சிங் என்பவரை தேடி வருவதாகவும், இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும் 117 நபர்களை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் துணை ஆணையர் ஸ்டாலின் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...