பிரான்ஸ் சென்ற கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் - பாரா பேட்மிட்டன் வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம்

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரான்ஸ் பாரிஸில் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளை சந்தித்துள்ளார்.



இது குறித்து வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று (செப்டம்பர் 2) பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா பேட்மிட்டன் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்ற தமிழக பெண் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், மனிஷா மற்றும் நித்யஸ்ரீ அவர்களுடன் பாரிஸ் ஈபிள் டவர் முன்பாக மகிழ்ச்சியுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் வானதி சீனிவாசன் ஈபிள் டவர் முன்பு வீராங்கனைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...