88-வது வார்டு பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் அய்வு


கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 88-வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் வசிக்கம் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.



இதனைத் தொடர்ந்து, குனியமுத்தூரில் அமைந்துள்ள அரசு அலுவலர் குடியிருப்புப் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தையும், மாநகராட்சிப் பூங்காவையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, குனியமுத்தூர், சோழன் நகரில் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள திறந்தவெளி கிணற்றை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



இந்த நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...