கோவை தடாகம் அருகே காட்டு யானை தாக்குதல்: வீடு சேதம், மாட்டு தீவனம் சூறையாடல்

கோவை தடாகம் அருகே காட்டு யானை ஒன்று வீட்டை சேதப்படுத்தி, மாட்டு தீவனங்களை உண்டதாக புகார். விவசாயிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: கோவை சின்ன தடாகம் பகுதியில் காட்டு யானை ஒன்று வீட்டை சேதப்படுத்தி, மாட்டு தீவனங்களை உண்டு சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களுக்கும், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மனிதர்களின் உணவுகளை உண்டு பழகிய காட்டு யானைகள் வறட்சி நிலை மாறிய பிறகும் வனப்பகுதிகளுக்குள் செல்லாமல் தொடர்ந்து விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்றன.



இந்நிலையில், செப்டம்பர் 1 அதிகாலை சின்ன தடாகம் பகுதியில் உள்ள வடவள்ளிக்காரர் என்ற சண்முகம் என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை சேதப்படுத்தி ஒரு காட்டு யானை உள்ளே நுழைந்துள்ளது. பின்னர் அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் சென்று மேற்கூரைகளை சேதப்படுத்தி, அங்கு மாடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தீவனங்களை தின்று, தூக்கி வீசி சூறையாடி சென்றுள்ளது.

மேலும், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிர்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு மற்றும் வனத் துறையினர் யானைகள் மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...