கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களிடமிருந்து 711 மனுக்கள் பெறப்பட்டன.



கோவை: தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் ஆகஸ்ட் 31 அன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மேற்கு மண்டல போலீசாருக்கான குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோவை மாநகரம்-மாவட்டம், திருப்பூர் மாநகரம்-மாவட்டம், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினரிடமிருந்து பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை காவல் துறை தலைவர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

சங்கர் ஜிவால் பேசுகையில், ஏற்கனவே இடமாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையிலும், இப்போது மனுக்கள் கொடுக்கும் போலீசாரின் மனுக்கள் சீனியாரிட்டி அடிப்படையிலும் பரிசீலிக்கப்படும் என்றார். மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன் இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த முக்கிய கூட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் சரவணக்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...