Update: பொள்ளாச்சி அருகே கார் விபத்து: இருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம்

பொள்ளாச்சி அருகே தாமரைக்குளம் பகுதியில் கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து. இதில் இருவர் உயிரிழந்தனர், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

உடுமலை தீபாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (28) என்பவர் தனது உறவினர் ஒருவரை கோவை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் தீபாலப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.



தாமரைக்குளம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையின் இடது புறமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பாலாஜியின் கார் மோதியது.



இந்த மோதலில் கார் நிலைதடுமாறி உருண்டு சென்றபோது, மேலும் மூன்று இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



படுகாயமடைந்த ஐந்து பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாசநாயக்கன்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் ஓட்டுனர் உள்ளிட்ட நான்கு பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அதிகாலையில் நடந்த இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...