கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டி: பரிசுக்காக குவிந்த உணவு பிரியர்கள்

கோவையில் போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் பங்கேற்றனர். ரூ.1 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் குவிந்தனர்.

போட்டியில் 3 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25,000, 4 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.50,000, 6 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் கவரப்பட்ட உணவு பிரியர்கள், எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு அதிகமாக வந்து குவிந்தனர்.



போட்டியாளர்கள் டோக்கன்கள் மூலம் குழுக்களாக பிரிக்கப்பட்டு, சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டிகள் நடத்தப்பட்டன. அரை மணி நேரத்தில் வரையறுக்கப்பட்ட அளவு பிரியாணிகளை சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



சிக்கன் பிரியாணி பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டதால், அளவு அதிகமாக இருந்தது. இதனால் பலரும் திணறி திணறி சாப்பிட்டனர். சிலர் சாப்பிட முடியாமல் இடையிலேயே விலகினர்.

போட்டியில் பங்கேற்றவர்களில் கணேச மூர்த்தி என்பவர் தனது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காக நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்றதாக தெரிவித்தார். இது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவையில் இருந்து மட்டுமல்லாமல், கேரளாவிலிருந்தும் பலர் இந்த போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர். உணவு பிரியர்களின் மகிழ்ச்சிக்காகவும், உதவி தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கிலும் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...