கோவையில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து இன்று அய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரஹரன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன முறைப்படுத்துதல் சிறப்பு விதிகள் 2012-ன் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்ளையும் தர ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யும் வகையில் இன்று கோவை மையம், கோவை தெற்கு மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 441 பள்ளி வாகனங்களுக்கு தர ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.



இப்பணிகளை மேற்கொள்ள மாநகர காவல்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஆகிய துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆய்வில் ஒவ்வொரு வாகனத்திலும் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி, தீயணைப்புக்கருவி, இருக்கை வசதிகள், அவசரக்கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுநர் கண்பார்வை மற்றும் உடல்தகுதி, உதவியாளர் நிலை உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்படும்.



கோவை மாவட்டத்திலுள்ள 4 வட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) 441 பள்ளி வாகனங்களும், நாளை (ஏப்ரல் 28) 411 பள்ளி வாகனங்களும், என மொத்தம் 852 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது" என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...