கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி திமுக உறுப்பினர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பங்கேற்பு

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் திமுக கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.



கோவை: கோவை துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில் திமுக கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் அருள்குமார் தலைமை வகித்தார். 2வது வட்ட கழக செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. நாகராஜன், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் மணிசுந்தர், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அமைப்பாளர் தியாகு, ஆதிதிராவிர அணி மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா, வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பேசுகையில், "அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் உரிய பதில்கள் தலைமையிடமிருந்து கண்டிப்பாக கிடைக்கும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்று வெற்றி பெற்றது போல, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இக்கூட்டத்தில் பகுதி அவைத்தலைவர், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்ட பிரதிநிதி தன்ராஜ் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...