கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலில் சமத்துவ அன்னதானம்

கோவை மத்திபாளையம் ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹியம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் ஆண்டு விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் கணபதி ஹோமம், பால்குடம் எடுத்தல், முளைப்பயிர் ஏற்படுத்தல், கும்மிப்பாட்டு நடனம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சமத்துவ அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான், மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனைப்படி, ஜாதி மத பேதமின்றி பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகளை செய்து வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, இந்த விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது.



அன்னதானத்தில் அரிசி சாதம், கதம்பம் சாம்பார், கதம்ப பொரியல், வந்த குளம்பு, ரசம், காய்கறி கூட்டு, அப்பளம், வடை, கோதுமை பாயாசம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த சமத்துவ அன்னதானத்தை பெண் பேரூராட்சி தலைவர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மனைவி, தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி, துணைத்தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



மேலும், கோயிலில் திருப்பணி ஆற்றும் பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் காலை மற்றும் மாலை சிற்றுண்டியை ஆரோக்கிய ஜான் வழங்கினார். இக்கோவிலில் விநாயகர், பதஞ்சலி முனிவர், எல்லை ஜக்கம்மா, ராகு, கேது, சப்த கன்னிமார், தடிக்காரபோத்தி, சிவன், நந்தீஸ்வரர், உண்ணாமலை அம்மன், அகத்தியர், முருகன், சிங்க வாகன பீடம், ஸ்வர்ண காலபைரவர், பேச்சியம்மன், மயானகாளி, சுடலைமாடன் ஆகிய கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்படுகிறது. ராகு கேது பெயர்ச்சி காலங்களிலும், விநாயகர் சதுர்த்தி, அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...