தமிழகத்தில் ஆன்மீகம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது - கோவையில் தமிழிசை செளந்தர்ராஜன்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், தமிழக அரசியலில் ஆன்மீகத்தின் முக்கியத்துவம், பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கம், மற்றும் தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தடைந்த முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: "பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை துவங்கி உள்ளோம். செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய உறுப்பினராக பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இணையவுள்ளார். உலக அளவில் மிகப்பெரிய கட்சியாகவும், தமிழகத்தில் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்."

முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆன்மீகத்தை பற்றி பேசாமல் இனிமேல் அரசியல் செய்ய முடியாது. முத்தமிழ் முருகன் மாநாட்டினை முதலமைச்சர் கலந்து கொண்டு துவக்கி வைத்திருக்க வேண்டும்," என்றார்.

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கொடி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "கொடியில் உள்ளது தாமரை இல்லை எனவே எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதில் யானை உள்ளதால் அந்த சின்னத்தை உடைய பகுஜன் சமாஜ் கட்சியினர் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சயாக தொடங்க வேண்டிய நிகழ்ச்சியை விமர்சனத்தோடு விஜய் தொடங்கியுள்ளார்," என்று கூறினார்.

தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்து பேசிய அவர், "தமிழகத்தில் தனித்து 11 சதவீத வாக்குகளும் கூட்டணியாக 18 சதவீத வாக்குகளும் பெற்று சொல்லால் அல்லாமல் செயலால் எங்களது பலத்தை நிரூபித்துள்ளோம்," என்றார்.

மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவிகள் மற்றும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் அதில் ஈடுபட்டவர்கள் தற்கொலை செய்தும், உயிரிழந்தும் உள்ளனர். பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை," என்று அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, தற்போதைய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த தமிழிசை செளந்தர்ராஜன், "பாடநூல்களின் விலையை உயர்த்தியுள்ளது, வேங்கைவையல் விவகாரத்தில் இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை. இது எல்லாம் இந்த அரசு சமூக நீதியில் தோல்வி அடைந்துள்ளதை வெளிக்காட்டுகிறது," என்று தெரிவித்தார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...