கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பொதுக் கழிப்பிடம், பள்ளி வகுப்பறைகள், தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மற்றும் வடக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இன்று (23.08.2024) நடைபெற்ற இந்த ஆய்வின் போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.





மேற்கு மண்டலத்தில், வார்டு எண் 72-ல் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் Swachh Bharat Mission திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணியையும்,





வார்டு எண் 45-ல் சாய்பாபா காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை மற்றும் யோகா பயிற்சி மையம் கட்டும் பணியையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





வார்டு எண் 37-ல் மருதமலை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி,



வேடபட்டி நரசிம்மபதி குளத்தில் Amrut திட்டத்தின் கீழ் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி ஆகியவற்றையும் ஆணையர் பார்வையிட்டார்.



மேலும், வார்டு எண் 74-ல் வீரகேரளம் பகுதியில் உள்ள கிருஷ்ணம்பதி குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.







வடக்கு மண்டலத்தில், வார்டு எண் 19 மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், NUHM நிதியின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் சுகாதார மையம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.





வார்டு எண் 4 சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், வார்டு எண் 11 சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 250 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் செல்வராஜ், பேபிசுதா, முதம், ராமமூர்த்தி, கதிரவேலுசாமி, உதவி ஆணையர்கள் சந்தியா (மேற்கு), ஸ்ரீதேவி (வடக்கு), உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், ஹரிபிரசாத், விமலா, இளங்கோ, நாசர், உத்தமன், ரவிக்கண்ணன், சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சலைத், லோகநாதன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...