கால்நடை பராமரிப்புத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன - உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கால்நடை பராமரிப்புத் துறை திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். பொள்ளாச்சி அருகே சாலைப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்றார்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா ஆடுகள், கறவை பசுக்கள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேருக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு இந்தத் திட்டங்கள் முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் இதுபோன்ற நல்ல திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக அரசு கறவை பசு, வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...