கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 65 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 65 மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று (20.08.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS மற்றும் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 65 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். இம்மனுக்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தன.



மண்டல வாரியாக பெறப்பட்ட மனுக்களின் விவரம்:

- கிழக்கு மண்டலம்: 7 மனுக்கள்

- மேற்கு மண்டலம்: 3 மனுக்கள்

- வடக்கு மண்டலம்: 10 மனுக்கள்

- தெற்கு மண்டலம்: 10 மனுக்கள்

- மத்திய மண்டலம்: 22 மனுக்கள்

- பிரதான அலுவலகம்: 13 மனுக்கள்

மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன் (மத்தியம்), ஸ்ரீதேவி (வடக்கு), முத்துசாமி (கிழக்கு), சந்தியா (மேற்கு), இளங்கோவன் (தெற்கு) (பொ), மோகனசுந்தரி (நிர்வாகம்), உஷாராணி (கணக்குகள்), உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...