கோவையைச் சேர்ந்த சரவணன் அனைத்து விதமான ஃபென்சிங் போட்டிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக தேர்வு

பஞ்சாபில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற கோவையின் சரவணன், அனைத்து விதமான ஃபென்சிங் போட்டிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது.



Coimbatore: கோவையைச் சேர்ந்த சரவணன், அனைத்து விதமான ஃபென்சிங் எனும் வாள் வீச்சு சண்டை போட்டிக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியை முடித்து கோவை திரும்பிய சரவணனுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு போட்டியில், பாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள இந்த போட்டியை, தற்போது தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருவதோடு, தேசிய அளவில் சாதித்தும் வருகின்றனர்.

கோவை மாவட்ட வாள்வீச்சு சங்கத்தில் பயிற்சி பெற்ற சரவணன், தேசிய விளையாட்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று ஏ கிரேட் பயிற்சியாளர் எனும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக தகுதி பெற்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் கல்வி சார் பிரிவாக செயல்படும் பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நகரில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் நடத்திய தேர்வில் சரவணன் கலந்து கொண்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 60 பேர் கலந்து கொண்ட இதில், கோயம்புத்தூர் மாவட்ட வாள்வீச்சு சங்கத்தில் பயிற்சி பெற்ற சரவணன், தேர்வாகி, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக பணியாற்ற தகுதி பெற்றார்.

கோவை திரும்பிய வாள் வீச்சு பயிற்சியாளர் சரவணனுக்கு இரயில் நிலையத்தில் கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் வாள்வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ், பொருளாளர் சிவமுருகன் மற்றும் உறுப்பினர்கள் அரவிந்த், விது ஷங்கர், விமல், பிரசாந்த், பவிலாஸ் மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஃபென்சிங் முதன்மை பயிற்சியாளர் சரவணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...