கோவை கல்லூரியில் 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோனுடன் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா வித்தியாசமாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் வடிவமைத்த 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோன் கவனம் ஈர்த்தன.


கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோட் மற்றும் ட்ரோன் மூலம் விழா சிறப்பாக நடைபெற்றது.

3டி ஏ.ஐ. ரோபோட் கைகளில் தேசியக் கொடி ஏந்தி வாழ்த்து தெரிவித்தது. மாணவர்கள் வடிவமைத்த ட்ரோனில் நாட்டின் தேசியக் கொடி வானில் பறந்தது. தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மாதாந்திர உதவித்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய கப்பல் படை அதிகாரி கமோடர் பாலசுந்தரம் கலந்து கொண்டார். அவர் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். "நாம் 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு நாடாக மாறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இளைய தலைமுறையினர் தங்களுக்குக் கிடைக்கும் ஸ்டார்ட்அப், ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்பு, ஆதரவு மற்றும் வசதிகளை நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து முப்படையைச் சேர்ந்த தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு, மாணவர்களின் சிலம்பாட்டம், மற்றும் ட்ரோன் சாகசம் போன்றவை நடைபெற்றன. இந்த வித்தியாசமான சுதந்திர தின கொண்டாட்டம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...