கோவை கூடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம்: 184 பயனாளிகளுக்கு ரூ.6.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கோவை கூடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. 184 பயனாளிகளுக்கு ரூ.6.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளின் கண்காட்சிகளும் இடம்பெற்றன.


Coimbatore: கோவை கூடலூர் நகராட்சி கேஸ் கம்பெனி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு வாழ்த்துரை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையேற்று மருத்துவத்துறை, தோட்டக்கலை, மகளிர் சுய உதவிக்குழுவினர், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அமைத்திருந்த கண்காட்சிகளை பார்வையிட்டார்.



நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் முன்னிலை வகித்து பேசினார். அவர் தனது உரையில், கூடலூர் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல கிராமங்கள் மலையிட பாதுகாப்பு குழும கட்டுப்பாட்டில் உள்ளதால் (அ கா - கிராமங்கள்) அங்குள்ள இடங்கள் மற்றும் வீடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் கூறினார். இந்த நிலையை மாற்றி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், மலையடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்காக வீட்டுவசதி துறை அமைச்சர் ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 300 சதுர அடி வரை வீடு கட்ட தற்போது அ.கா தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகைப் பதிவு 90 சதவீதமாக உள்ளதை குறைந்தது 95 சதவீதமாக உயர்த்த பெற்றோர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றில் வருவாய் துறையின் இலவச வீட்டுமனை பட்டா, ஆதி திராவிடர் நலத்துறையின் தனிநபர் வன அலுவலக உரிமை பட்டா, தையல் எந்திரம், குடும்ப அட்டை, மகளிர் திட்டத்தின் கீழ் சுய உதவி குழுவினருக்கான உதவிகள், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை மானியங்கள், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், மகப்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை அடங்கும். மொத்தம் 184 பயனாளிகளுக்கு சுமார் ரூபாய் 6 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் முடிவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் மனோகரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...