கோவையில் உடல் பருமன் விழிப்புணர்வு மாரத்தான்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு அதிகரிப்பு

கோவையில் விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில் உடல் பருமன் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



Coimbatore: கோவை வ.உ.சி மைதானத்தில் விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில் 4வது ஆண்டாக உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் மருத்துவர் வி.ஜி. மோகன்பிரசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் 3,200 பேர் பங்கேற்றனர். 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வீல்சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆண்கள், பெண்கள் பங்கேற்று ஓடினர்.



மாரத்தான் போட்டி வளாகத்தில் மூத்த கேஸ்ட்ரோ என்டரால்ஜிஸ்ட் மருத்துவர் மோகன் பிரசாத் மற்றும் ஆர்த்தோ மருத்துவர் சுமன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: "இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது 11% முதல் 30% வரை அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்."

"துரித உணவு, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, உடற்பயிற்சியின்மை போன்ற நவீன வாழ்க்கை முறையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். கொழுப்பு படிந்த கல்லீரல், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன," என்றனர்.



குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். "முன்பு ஒரு குழந்தை சிகிச்சைக்கு வந்தால், இப்போது ஐந்து குழந்தைகள் வருகின்றனர். உடற்பயிற்சி இன்மை, விளையாட்டு இல்லாமை, அதிக நேரம் செல்போன் பயன்பாடு போன்றவை காரணங்களாக உள்ளன," என்றனர்.

உடல் பருமனால் எலும்பு தேய்மானம், எலும்பு பலவீனம் ஏற்படுவதாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி, சத்தான உணவு அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.



இந்த மாரத்தானில் மூத்த கேஸ்ட்ரோ மருத்துவர்கள் வி.ஜி. மோகன்பிரசாத், கோகுல் கிருபா சங்கர், ஆர்தோ மருத்துவர் சுமன், கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மதுரா சுமன், வம்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...