கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை காலம் ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.


Coimbatore: கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான (Spot Admission) கால அவகாசம் ஆகஸ்ட் 16, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 1 முதல் ஜூலை 31, 2024 வரை நடைபெற்ற சேர்க்கை இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி சேர்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். நேரில் வருகை புரிவோருக்கு நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை, மேலும் சிறப்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஓராண்டு பயிற்சியில் Computer Operator & Programming Assistant (COPA), Desktop Publishing Operator (DTPO), IoT Technician (Smart Health Care), Sewing Technology ஆகிய பிரிவுகளும், ஈராண்டு பயிற்சியில் Instrument Mechanic (IM), Electronics Mechanic (EM), Information Technology (IT), Technician Medical Electronics (TME) ஆகிய பிரிவுகளும், ஆறு மாத பயிற்சியில் Smart Phone Technician Cum App Tester பிரிவும் உள்ளடங்கும்.

பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (NCVT) வழங்கப்படும். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ.750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமை பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது. மேலும், மிதிவண்டி, சீருடை தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பஸ் பாஸ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

நவீன தொழில் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு Industrial Visit, Inplant Training, Internship Training போன்றவையும் வழங்கப்படுகின்றன.

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்: 98651 28182, 94900 55602, 8838158132, 94422 39112 என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...