பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றக் கூட்டத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி பேசிய போது, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் "என்ன ஜாதி" என ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் செயலை வன்மையாக கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...