பொள்ளாச்சி அருகே காளியப்பாகவுண்டன் புதூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது - போக்குவரத்து துண்டிப்பு

பொள்ளாச்சி அருகே காளியப்பாகவுண்டன்புதூரில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆழியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால் அணைக்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பாகவுண்டன்புதூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட தரைமட்ட பாலம் ஆற்றில் மூழ்கியது.



இதனால் அப்பகுதியில் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே, செல்ஃபி மோகத்தால் பொதுமக்கள் பலர் ஆற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை உணராமல் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...