கோவை TNAU-வில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவினருக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

கோவை TNAU-வில் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 2 அன்று நடைபெறுகிறது. 500 இடங்களுக்கான இந்த சரிபார்ப்பு அண்ணா அரங்கத்தில் நடத்தப்படும்.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) 2024-2025 கல்வியாண்டுக்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் TNAU, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) ஆகியவற்றுக்கு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு (Academic Stream) மற்றும் 7.5% இடஒதுக்கீடுக்கான இணையதளவழி கலந்தாய்வு ஜூன் 23 முதல் 26 வரை நடைபெற்றது. தற்போது, TNAU-வில் பொதுக் கல்விப்பிரிவில் ஏற்பட்ட காலியிடங்களுக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 2, 2024 அன்று நடைபெறவுள்ளது. இந்த சரிபார்ப்பு மொத்தம் 500 இடங்களுக்கு நடத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம் மற்றும் சாதிய அடிப்படையில் தற்காலிக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களான 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழுடன் TNAU வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலோ வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என TNAU தெரிவித்துள்ளது.

Newsletter

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...