கோவையில் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கல்லூரியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும்" என அறிவித்தார்.

'தமிழ் புதல்வன்' திட்டம் கடந்த ஜூன் 14ஆம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு நடப்பு கல்வியாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் பேசுகையில், "எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையேனும் கொளத்தூர் தொகுதிக்கு வந்துவிடுவேன். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி கிடைத்துவிடும். கொளத்தூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதி தான். எந்த கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் சரி, அவர்களது கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது" என்றார்.

"1,400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம், அதில் கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். இறைப் பணியோடு சேர்த்து கல்விப் பணியும் செய்து வருகிறோம். கல்விக்கு சாதி தடையாக இருக்கக் கூடாது, கல்வியை உங்களிடம் இருந்து திருட முடியாது" என்றும் முதல்வர் கூறினார்.

'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...