எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம்

தெற்கு ரயில்வே, எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர அடிப்படையில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன. தற்போது, பயணிகளின் வசதிக்காக கிருஷ்ணராஜபுரத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அட்டவணையின்படி, ரயில் எண் 06001 எர்ணாகுளம் - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் இரவு 9.05 மணிக்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும். அதேபோல, ரயில் எண் 06002 பெங்களூரு கண்டோன்மென்ட் - எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் காலை 5.40 மணிக்கு வந்து, 5.42 மணிக்கு புறப்படும்.

இந்த கூடுதல் நிறுத்தம் பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...