கோவை TNAU-வில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு நேரடி கலந்தாய்வு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான நேரடி கலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 171 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) இன்று (ஜூலை 27) வெளியிட்ட செய்திக்குறிப்பில், இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு (Academic Stream) மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிலுள்ள காலியிடங்களுக்கு நேரடி கலந்தாய்வு (Offline Counseling) நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நேரடி கலந்தாய்வு ஜூலை 30, 2024 (செவ்வாய்கிழமை) அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும். மொத்தம் 171 இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

நேரடி கலந்தாய்வில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் அலைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த மின்னஞ்சலில் கல்லூரி வாரியாக உள்ள காலியிடங்களுக்கான அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், நேரடி கலந்தாய்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் மற்றும் கல்லூரி வாரியாக உள்ள காலியிடங்களுக்கான அட்டவணை ஆகியவை https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மறு பரிசீலனை செய்யப்படமாட்டாது என்றும் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...