விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியது யார்?: மகனின் சாவில் உரிய விசாரணை வேண்டி பெற்றோர் புகார்

கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாரன். ஓய்வுபெற்ற இராணுவ வீரர். இவரது மனைவி சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சித்தார்த் (19) அதேப் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்நிலையில், நேற்று சித்தார்த் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இரவு 10 மணியளவில் சுங்கம் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி சித்தார்த்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு 21-வது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சித்தார்த்தை சிறிது நேரத்தில் மர்மநபர் ஒருவர் அழைத்துச் சென்று சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து சித்தார்த்தும் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் மீண்டும் அந்த மர்மநபர் சித்தார்த்தை அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கே அழைத்துவந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்தார்த் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் மகன் சித்தார்த் உயிரிழந்தது குறித்து தகவலறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர். தொடர்ந்து, தனது மகனை எதற்காக இங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினீர்கள் என்று மருத்துவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இருப்பினும் மருத்துவர்கள் முறையாக பதிலளிக்காததைத் தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சித்தார்த்தின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

அதில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகனை பணத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றியுள்ளனர். எங்களது மகனை அழைத்துச்சென்றவர் இடைத்தரகராக இருக்கலாம். அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளித்திருந்தால் சித்தார்த் உயிர் பிழைத்திருப்பார். இதில் உள்ள மர்மங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மணிமாரன், சாந்தி தம்பதியினர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...