கோவை ரமணீஸ் மயூரியில் பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை ரமணீஸ் மயூரியில் இரண்டு மாதங்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணியால் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம். பணியை விரைவில் முடிக்க கோரிக்கை.


Coimbatore: கோயம்புத்தூர் துடியலூர் சரவணம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ரமணீஸ் மயூரியில் பாதாள சாக்கடை பணி இரண்டு மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணியால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதாள சாக்கடை பைப் புதைக்கப்பட்டு பள்ளங்கள் சரியாக மூடப்படாத நிலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக பள்ளங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு மிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் நடந்து செல்பவர்களும் மழை நீரில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் ரமணீஸ் மயூரி பகுதி பொதுமக்கள் இன்று (ஜூலை 25) கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பணி முடியும் வரை தற்காலிக நடவடிக்கையாக சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...