பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த மேம்பாலப் பணிகள் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், இன்னும் பணிகள் முடிவடையவில்லை. தற்போது ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலை சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கான முக்கிய பாதையாகும். முன்னதாக இருந்த தற்காலிகப் பாலம் கடந்த ஆண்டு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அது இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும், ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளுக்காக கம்பிகள் மற்றும் கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் தென் சங்கம்பாளையம் மற்றும் சுங்கம் வழியாக சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கரடுமுரடான பாதைகளில் உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. சிலர் விபத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஜூலை 24 ஆம் தேதி கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...