உடுமலையில் தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் - வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காந்தளூர் மறையூர் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் தங்கும் விடுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள காந்தளூர் மறையூர் சாலையில் தனியார் பள்ளி அருகில் தங்கும் விடுதி ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த பகுதியில் சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தங்கும் விடுதியின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், யானைகள் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறின.



தங்கும் விடுதியில் யாரும் இல்லாத காரணத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...