பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் - உடனடி சீரமைப்பு தேவை

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைப்பால் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு, குடிநீர் விநியோக பாதிப்பு ஆகியவற்றால் உடனடி சீரமைப்பு தேவை என மக்கள் கோரிக்கை.


கோவை: பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (ஜூலை 20) மதியம் நடந்துள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியின் பிரதான குடிநீர் குழாய் தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் ஏராளமான தண்ணீர் வீணானது. குழாய் உடைப்பை சரி செய்த நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, சாலையின் மையத்தில் பெரிய குகை போன்ற பள்ளம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்து, வாகனங்களை ஓரமாக செல்லும்படி அறிவுறுத்தினர். சில மாதங்களுக்கு முன்புதான் இப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறையால் ரவுண்டானா அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக ரவுண்டானா பகுதியிலும் பிளவுகள் ஏற்பட்டு, மண்ணுக்குள் புதையும் நிலையில் உள்ளது. மேலும், அதனைச் சுற்றி வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், பொள்ளாச்சி நகரில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து பாதிப்பு மற்றும் குடிநீர் விநியோக பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...