பொள்ளாச்சியில் சிற்பி இலக்கிய விருது விழா: பல எழுத்தாளர்களுக்கு கௌரவம்

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா நடைபெற்றது. பல்வேறு எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிற்பி பாலசுப்ரமணியத்தின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா 16-07-2024 அன்று நடைபெற்றது. என்.ஜி.எம் கல்லூரியின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

விழாவில், பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. முனைவர் க.பஞ்சாங்கம் இந்த நூல்களை வெளியிட்டு அறிமுக உரையாற்றினார். முனைவர் கி.பார்த்திபராஜா நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். "நறிவிலி" எனும் கவிதைத் தொகுப்பும், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதைகளின் மொழிபெயர்ப்பான "உழவனின் பாடல்" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.



2023ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுகள் கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி மற்றும் கவிஞர் கோ.வசந்தகுமாரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஓவியக் கவிஞர் அமுதபாரதி மற்றும் கவிஞர் நா.வே.அருள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. மேலும், பதிப்பியல் வித்தகர் எனும் விருது மணிவாசகர் பதிப்பகத்தைச் சார்ந்த இராம.குருமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.



விருதாளர்கள் குறித்த அறிமுக உரையை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கவிஞர் க.அம்சப்ரியாவும் கவிஞர் இரா.பூபாலனும் வழங்கினர். கவிஞர் நந்தலாலா விருதுபெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். கிருங்கை சேதுபதி நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் வடிவேல் மற்றும் பேராசிரியர் சேதுபதி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.



நாஞ்சில்நாடன், சுப்ரபாரதிமணியன், விஜயா மு.வேலாயுதம் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், இலக்கிய அமைப்பினர் என திரளானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். சிற்பி அறக்கட்டளை, என்.ஜி.எம் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...