சிறந்த வீட்டுத்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' சார்பில் விருதுகள் - விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் சிறந்த வீட்டுத்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' அமைப்பு விருதுகள் வழங்க உள்ளது. ஜூலை 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புற பசுமையை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதி இது.


கோவை: 'சிறுதுளி' அமைப்பு, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கு 'சிறந்த வீட்டுத்தோட்டம் விருது-2024' போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டியை தோட்டக்கலை மேம்பாடு மற்றும் நகர்ப்புற பசுமையை ஊக்குவிக்கும் 'தார்மிக் கார்டன்ஸ்' நிறுவனம் மற்றும் 'தினமலர்' நாளிதழ் உடன் இணைந்து நடத்துகிறது.

'சிறுதுளி' அமைப்பு நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்பதற்காக இடைவிடாது இயங்கி வருவதோடு, நகர்ப்புறங்களில் பசுமையை அதிகப்படுத்துவதற்கு மரம் நடுதல் மற்றும் அடர் வனம் அமைத்தல் ஆகிய பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்கள் அமைப்பதையும் ஊக்குவித்து வருகிறது.

கோவை நகரில் 'மாடி வனம்' எனும் திட்டத்தைத் துவக்கி, நகர்ப்புறங்களில் பசுமையை அதிகரிப்பதுடன், மக்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைக்கவும் 'சிறுதுளி' அமைப்பு ஊக்குவித்து வருகிறது. வீடுகளிலேயே பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற ரசாயனங்கள் இல்லாத இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில், 'தார்மிக் கார்டன்ஸ்' நிறுவனம் உதவுகிறது.

கோவையில் தலா 10, மேட்டுப்பாளையத்தில் தலா ஐந்து என்ற எண்ணிக்கையில், சிறந்த வீட்டுத் தோட்ட விருதுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், பெயர், தொடர்பு எண், இ-மெயில், தோட்டத்தின் பரப்பு, மரங்களின் எண்ணிக்கை, மரங்கள் மற்றும் தாவரங்களின் வகைகள் ஆகிய விபரங்களுடன், தோட்டத்தின் 10 போட்டோக்களுடன் விண்ணப்பங்களை, வரும் ஜூலை 27க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது திருச்சி ரோட்டில் கண்ணம்பாளையத்தில் 26/E என்ற இலக்கத்திலுள்ள தார்மிக் கார்டன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்திலும் பதிவு செய்யலாம். விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 98946 31551, 84899 43095, 96003 14328 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...