சிறு, நடுத்தர வணிகங்களை வலுப்படுத்த புதிய முயற்சியில் மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம்

கோயமுத்தூரில் உள்ள சிறு, நடுத்தர வணிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்த மைக்ரோசாப்ட் இன்டியா, கிளவுட்(cloud) அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை வழங்க உள்ளது. இந்திய தரவு மையங்களில் உதவியுடன் மைக்ரோசாப்ட் அசுர், ஆபிஸ் 365, சிஆர்எம் ஆன்லைன் மற்றும் பேரிடர் மீள் சேவை போன்றவைகளை பயன்படுத்தி மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம் இயங்குவதை பற்றி கோவை நகரில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களான பயோலைன் ஆய்வகம், மான்ட்ப்ளூ தொழிநுட்பம் விளக்கியுள்ளன.



இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் மையத்தை 50%க்கும் மேலாக பயன்படுத்தும் 8 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. பயோலைன் பரிசோதனை மையமானது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட மையங்கள் இணைந்து செயல்படுகின்றன. இதுபோன்றே மான்ட்ப்ளூ தொழிநுட்பம் நிறுவனம் ஆபீஸ் 365 பயன்படுத்தி வணிகத்தை ஒருங்கிணைந்து, வணிகத்தை மேம்படுத்தியுள்ளது. இத்தகைய வசதியால், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு 25% விற்பனையை அதிகரிக்கும்.

இது பற்றி மைக்ரோசாப்ட் இன்டியா எஸ்எம்பி வணிக தலைவர் மணிஷ் ஷர்மா கூறுகையில்; எங்களது கிளவுட் தொழில்நுட்பத்தை சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்துவதால், சர்வதேச வாய்ப்புகளை பெற்றுள்ளன. இந்த வணிகத்தை சக்தியுள்ளதாக மாற்றும் வகையில் சரியான தீர்வுகளை புதுமையாகவும், வளர்ச்சிக்கு உகந்தவையாகவும் மைக்ரோசாப்ட் அளிக்க கடமைப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் வணிக அமைப்பானது, வணிக மாதிரிகளை உருவாக்குவதோடு மற்றும் தேவையான மாற்றங்களை குறைவான விலையில் அமைத்து தருகிறது. 

வாடிக்கையாளர்கள், வணிகத்தின் அளவை உயர்த்துவதோடு அதன் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது. இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்கள் அதிக அளவில்  உள்ள நகரமாக கோயமுத்தூர் திகழ்கிறது. கிளவுட் தொழில்நுட்பத்தால் நோயாளிகளை நன்கு கவனிப்பதில் பயோலைன் ஆய்வகம் சிறப்பாக செயல்படுகிறது. மான்ட்ப்ளு தொழில்நுட்பம், வேலைத்திறனை முழுமையாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளது. என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...