கோவையில் மத ஒற்றுமையைப் பறைசாற்றிய இஸ்கான் தேரோட்டம்..!

கோவையில் இஸ்கான் அமைப்பின் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒப்பணக்கார வீதியில் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்று, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒடிசாவின் புரி ஜெகன்னாதர் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த தேரோட்டம் நடத்தப்பட்டது.

தேர்முட்டியில் தொடங்கிய தேரோட்டம், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர்முட்டி நோக்கிச் சென்றது. ஒப்பணக்கார வீதியில் தேர் சென்ற போது, அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்றனர். இஸ்கான் அமைப்பினர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த செயல் பார்ப்போரை நெகிழச் செய்தது.



அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ஜெகன்னாதர், சுபத்ரா தேவி, பலதேவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரோட்டத்தின் போது பக்தர்கள், "ஹரே ராம ஹரே கிருஷ்ணா" என்று பஜனை பாடிக் கொண்டும், பெண்களும் சிறுமிகளும் கும்மியாட்டம் ஆடிக் கொண்டும் சென்றனர்.



பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த தேரோட்டமானது நடைபெற்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தேரைப் பின் தொடர்ந்து சென்றன. இந்த தேரோட்டம் கோவையில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...