பார்சிலோனியாவில் 'மெக்கப்-2017' டோரனமென்ட்டில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் கோவை திரும்பினர்

சர்வதேச அளவிலான 'மெக்கப்-2017' ஃபுட்பால் டோரனமென்ட் என்னும் ஃபுட்பால் போட்டி பார்சிலோனியாவில் உள்ள மொனாகோ என்னும் தீவில் நடைபெற்றது. இதில், கோவையில் இருந்து பர்ஸ்ட் கிக் என்னும் அணியின் சார்பில் 11 மற்றும் 13 வயதிற்கு உட்பட்ட இரண்டு அணியின் 32 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் நாக் அவுட் சுற்றுவரை சிறப்பாக விளையாடிய இந்த இரு அணியினரும் இறுதியில் நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து, இன்று கோவைக்கு விமானம் மூலம் திரும்பிய பர்ஸ்ட் கிக் அணியினரை அவர்களது பெற்றோர்கள், நண்பர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மலர் கொத்து, பரிசுப் பொருட்களுடன் உற்சாகமாக வரவேற்றனர்.

இப்போட்டி குறித்து பர்ஸ்ட் கிக் அன்டர் 11 அணியின் கேப்டன் பிரனவ் கூறியதாவது:-

எல்லோ ட்ரயின் என்னும் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் நான் பர்ஸ்ட் கிக் அணியின் அன்டர் 11 பிரிவின் கேப்படனாக உள்ளேன். மொனாகோ என்னும் தீவில் நடைபெற்ற மெக்கப் ஃபுட்பால் டோரனமென்டில் எங்களது அணி பங்கேற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

சர்வதேச அளவில் பங்கேற்ற இப்போட்டியின் மூலம் எங்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைத்துள்ளது. சிறிய வயதில் இந்தளவிற்கு பெரியளவிலான போட்டியில் பங்கேற்றதன் மூலம் எங்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும் இது ஏமாற்றம் அளிக்கவில்லை. மெக்கப் போட்டியில் ஜெனெக் என்ற அணியுடன் விளையாடுகையில் மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும், அவர்களின் யுத்திகள், துள்ளியமான தாக்குதல்கள் எங்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது" என்றார்.



அன்டர் 13 கேப்டன் பரம் இதுகுறித்து பகிர்ந்துகொள்கையில், இன்டியன் பப்ளிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் நான் பர்ஸ்ட் கிக் டீம்மின் அன்டர் 13 கேப்டனாக உள்ளேன். மெக்கப் போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இருப்பினும், அங்குள்ள சர்வதேச தரத்திலான விளையாட்டுத்தளம் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.

நம் நாட்டைத் தவிர மற்ற அணியினர் பயிற்சி மேற்கொள்ளும்போதே சர்வதேச அளவிலான மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர். அங்குள்ள விளையாட்டு வீரர்களின் நடவடிக்கைகள், பண்புகள் புதவிதமாகவும், மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இந்த போட்டியின் மூலம் நாங்கள் பலவற்றை கற்றுள்ளோம்" என்றார்.



பர்ஸ்ட் கிக் அணியின் பயிற்சியாளர் ஜாய் கூறுகையில், மெக்கப்- 2017 போட்டியில் பங்கேற்க மொத்தமாக 32 விளையாட்டு வீரர்களும், 6 பயிற்சியாளர்களும் சென்றோம். இதில், மூன்றுபேர் சென்னையும், மீதமுள்ளவர்கள் கோவை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

மெக்கப் டோரனமேன்டில் அன்னடர் 11 மற்றம் அன்டர் 13 அணியினர் தலா 5 போட்டிகளில் பங்கேற்றனர். இதில், ஆஸ்டிரேலியா, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், மாஸ்கோ உள்ளிட்ட அணியினரை எதிர்த்து பர்ஸ்ட் கிக் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 

இப்போட்டியில் இவர்கள் பெற்ற தோல்வியை புதிய அனுபவமாகவே கருதப்படுகிறது. மொனாகோ தீவில் 7 விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அவை அனைத்துமே சர்வதேச அளவில் புதிய தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களில் இயற்கையான புல் நடவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால், அங்கே உள்ள மைதானத்தில் செயற்கையான புல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நமது அணியினர் விளையாடுகையில் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன.



நமது நாட்டிலும் அதுபோன்ற புதிய யுத்திகளை கையாள வேண்டும். சர்வதேச தரத்திலான மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போதே பல விளையாட்டுகளில் வெற்றிகளை குவிக்க முடியும். நம் நாட்டில் அதுபோன்ற கட்டமைப்புகளை உறுவாக்க அரசு நடவக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...