பொள்ளாச்சியில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாட்டம்: குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு முறைகள், இளம் வயது திருமணத்தின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட குடும்ப நல துறையுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் தாய்மார்களுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் கார்த்திகேயன், மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி, டாக்டர் ராஜாத்தி, மகப்பேறு உதவியாளர் திருமதி குணவதி, கவுன்சிலர் திருமதி மகேஸ்வரி முதலியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



"ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்ப நலம் - இதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்" என்ற இந்த வருடத்தின் கருப்பொருள் விளக்கி கூறப்பட்டது. குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தும் தாய்மார்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

சட்டப்படி குறைந்தபட்ச திருமண வயது 18 என்பதும், இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் உடல் பாதிப்புகளும் விளக்கப்பட்டன. முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகே இரண்டாவது குழந்தை பெற வேண்டும் என்றும், இடைப்பட்ட காலத்தில் தற்காலிக கருத்தடை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.



மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மகப்பேறு மருத்துவர்கள் மூலம் தினமும் செய்யப்படுவதாகவும், 22 வயதுக்குப் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்த பின் அறுவை சிகிச்சை மூலம் குடும்பக் கட்டுப்பாடு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற கொள்கையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு, இரண்டு குழந்தைகளுடன் தாய் மற்றும் தந்தை அந்தக் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...