மேட்டுப்பாளையத்தில் இருந்து பழங்குடியினர் கிராமங்களுக்கு புதிய பேருந்து சேவை: எம்.பி. ஆ.ராசா துவக்கி வைத்தார்

நீலகிரி எம்.பி. ஆ.ராசா, மேட்டுப்பாளையத்திலிருந்து பழங்குடியினர் கிராமங்களுக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இந்த சேவை மூலம் பல கிராமங்கள் பயனடையும்.


கோவை: நீலகிரி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பழங்குடியினர் கிராமங்களுக்கு புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் விளாமரத்தூர், நந்தவனப்புதூர், பூதப்பள்ளம், மேல்குறவன் கண்டி, கீழ்குறவன் கண்டி, எழுத்துக்கல்புதூர், அத்திக்கடவு, மானாறு, சொரண்டி, கூடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து மேட்டுப்பாளையம் வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து வசதிகளை இயக்க வேண்டும் என நீலகிரி எம்பி ஆ.ராசாவிடம் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லித்துறை வரை சென்று கொண்டிருந்த பேருந்தை விளாமரத்தூர் வரை நீட்டித்தும், அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, தாயனூர், வெள்ளியங்காடு கூடப்பட்டி வரை சென்ற அரசு பேருந்தின் இயக்கத்தை மேல்குறவன் கண்டி வரை நீட்டித்து புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த பேருந்துகளின் இயக்கத்தை ஜூலை 11 அன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து விளாமரத்தூருக்கு மாலை 4.30 மணி அளவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல்குறவன் கண்டிக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் கோவை பொது மேலாளர் ஸ்ரீதரன், உதகை பொது மேலாளர் கணபதி, மேட்டுப்பாளையம் கிளை மேலாளர்கள் ராதாகிருஷ்ணன், வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி, டி.ஆர்.சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன், துணைத்தலைவர் அருள் வடிவு, கூடலூர் நகர மன்ற தலைவர் அறிவரசு, ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், நகர செயலாளர்கள் முகமது யூனூஸ், முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...