கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் குறைகேட்பு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள், தற்போதைய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 3 அன்று நடைபெற்றது. 27 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati தலைமையில் இன்று ஜூலை 3 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் ரூபா சுப்புலெட்சுமி, மாவட்ட முப்படை வீரர் வாரிய உபதலைவர் கேப்டன் ஸ்ரீகணேஷ் ராஜ் (ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், இலவச வீடு, சிறப்பு நிதியுதவி, குடிநீர் இணைப்பு, வேலைவாய்ப்பு கடனுதவி உள்ளிட்ட 27 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.

பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...